கனடாவில் புதிய வகை கொவிட் உப திரிபு- எச்சரிக்கும் நிபுணர்கள்
16 வைகாசி 2024 வியாழன் 09:36 | பார்வைகள் : 3136
கனடாவில் புதிய வகை கொவிட் உப திரிபு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கொவிட் உப திரிபு கனடாவில் பரவலாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் தற்போதைய கொவிட் தொற்றாளர்களில் 30 வீதமானவர்கள் இந்த புதிய உப திரிபு தாக்கத்திற்கு உள்ளானவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
KP.2, என்ற புதிய வகை உப திரிபே அண்மைக் காலமாக நாட்டில் பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும், கோவிட் திரிபுகளினால் பாரதூரமான பாதிப்புக்கள் எதுவும் தற்போது பதிவாகவில்லை என மருத்துவத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த காலங்களைப் போன்று இந்த புதிய வகை உப திரிபுகள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.