இலங்கையில் பணவீக்கம் மேலும் வீழ்ச்சி
21 ஆவணி 2023 திங்கள் 13:04 | பார்வைகள் : 9676
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம், கடந்த ஜூலை மாதம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம், இன்று வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கடந்த ஜூன் மாதம் 10.8 சதவீதமாக பதிவான தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம், ஜூலை மாதம், 4.6 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் 2.5 சதவீதமாக காணப்பட்ட உணவு பணவீக்கம் ஜூலை மாதத்தில், மறை 2.5 சதவீதமாக குறைவடைந்துள்ளது.
ஜூன் மாதத்தில் 18.3 சதவீதமாக பதிவான உணவல்லா பணவீக்கம் ஜூலை மாதம் 10.9 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.


























Bons Plans
Annuaire
Scan