Paristamil Navigation Paristamil advert login

ஹீரோவாக நடிக்க மறுக்கும் முன்னணி நடிகர்கள் திணறும் சஞ்சய்?

ஹீரோவாக நடிக்க மறுக்கும் முன்னணி நடிகர்கள் திணறும் சஞ்சய்?

16 வைகாசி 2024 வியாழன் 14:00 | பார்வைகள் : 2142


நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், கனடாவில் பிலிம் மேக்கிங் படித்து முடித்ததும் சில குறும்படங்களை இயக்கினார். விஜய்க்கு தனது மகனை தன்னை போல் ஹீரோவாக நடிக்க வைக்க விருப்பம் இருந்தது. இதற்காக கதையெல்லாம் கேட்டு வந்தார். குறிப்பாக பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சொன்ன கதை விஜய்க்கு மிகவும் பிடித்துப் போக, அதில் தன் மகன் நடித்தால் சூப்பராக இருக்கும் என எண்ணி, அவரிடம் இந்த தகவலை கூறி இருக்கிறார்.

ஆனால் ஜேசன் சஞ்சய் தனக்கு நடிப்பில் ஆர்வமில்லை என கூறிவிட்டதால் மகனை ஹீரோவாக்கும் முயற்சியை கைவிட்டார் விஜய். நடிப்பில் ஆர்வம் இல்லாவிட்டாலும் இயக்குனர் ஆக விரும்பிய ஜேசன் சஞ்சய், சைலண்டாக அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார். அவருக்கு முதல் வாய்ப்பை லைகா நிறுவனம் வழங்கியது. அதன்படி ஜேசன் சஞ்சய் இயக்க உள்ள முதல் தமிழ் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது.

விஜய் மகன் இயக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகி கிட்டத்தட்ட ஓராண்டு ஆகப்போகிறது. ஆனால் அப்படம் குறித்த அடுத்தக்கட்ட அப்டேட் இதுவரை வெளியாகவில்லை. லேட்டஸ்ட் தகவலின் படி தன் படத்திற்கு ஹீரோ கிடைக்காமல் ஜேசன் சஞ்சய் திண்டாடி வருவதாக கூறப்படுகிறது. முதலில் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதி, துருவ் விக்ரம் ஆகியோரது பெயர்கள் அடிபட்டது. பின்னர் கவினை சந்தித்து ஜேசன் சஞ்சய் கதை சொன்னதாக செய்திகள் வெளியானது.

கவினும் சமீபத்திய பேட்டியில் அதை உறுதி செய்திருந்தார். ஆனால் அனைவருமே கதை கேட்ட கையோடு நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. ஜேசன் சஞ்சய் தன் படத்தில் முன்னணி நடிகர்களை நடிக்க வைக்க முனைப்பு காட்டி வருகிறாராம். ஏனெனில் அவர்கள் நடித்தால் படத்தின் பிசினஸுக்கு அது பலமாக அமையும் என அவர் கருதுகிறாராம். ஆனால் டாப் நடிகர்களோ, அனுபவம் இல்லாத ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க தயங்குகிறார்களாம். விஜய் மகன் என்பதால் மரியாதைக்காக கதை மட்டும் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ஒரு வருடம் ஆகப்போகும் நிலையில் ஹீரோ கிடைக்காமல் சஞ்சய் திணறி வருவதால் அவரது படம் ஒரு இன்ச் கூட நகராமல் இருக்கிறதாம்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்