Paristamil Navigation Paristamil advert login

இலங்கையர்களுக்கு ருமேனியா ஆசை காட்டி 83 இலட்சம் ரூபாவை மோசடி

இலங்கையர்களுக்கு ருமேனியா ஆசை காட்டி 83 இலட்சம் ரூபாவை மோசடி

21 ஆவணி 2023 திங்கள் 14:36 | பார்வைகள் : 4387


ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 83 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த நபரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கைது செய்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கடந்த 16ஆம் திகதி குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

இராஜகிரிய பகுதியை சேர்ந்த சந்தேக நபர் ருமேனியாவில் தொழில் வழங்குவதற்காக 83 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டதாகவும், அவர் வாக்குறுதியளித்தபடி வேலை வழங்கவில்லை எனவும் பணியகத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இந்த முறைப்பாட்டிற்கு மேலதிகமாக சந்தேகநபருக்கு எதிராக பணியகத்திற்கு 9 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு தலா 5 இலட்சம் ரூபா மற்றும் 3 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்