Paristamil Navigation Paristamil advert login

துாதரகங்களை தகர்க்க சதி: தலைமறைவு பயங்கரவாதி கைது

துாதரகங்களை தகர்க்க சதி: தலைமறைவு பயங்கரவாதி கைது

17 வைகாசி 2024 வெள்ளி 02:30 | பார்வைகள் : 2105


துாதரகங்களை வெடிகுண்டு வைத்து தகர்க்க சதி திட்டம் தீட்டிய வழக்கில், ஜாமினில் வெளியே வந்து தலைமறைவாக இருந்த பயங்கரவாதியை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கர்நாடகாவில் கைது செய்துள்ளனர்.

கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள இஸ்ரேல் துாதரகம் மற்றும் சென்னையில் உள்ள அமெரிக்க துாதரகத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்க சதி திட்டம் தீட்டிய வழக்கில், இலங்கையை சேர்ந்த முகமது ஷாகிர் ஹுசைன், பாகிஸ்தானின் அமிர் ஜுபைர் சித்திக், கர்நாடகாவின் மைசூரை சேர்ந்த நுாருதீன் என்ற ரபி ஆகியோரை, கடந்த 2014ல் என்.ஐ.ஏ., கைது செய்தது.

இவர்கள் மீது சென்னையில் உள்ள, என்.ஐ.ஏ., நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆனது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நுாருதீனுக்கு, சென்னை என்.ஐ.ஏ., நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ஜாமினில் வெளியே வந்தவர் தலைமறைவாகி விட்டார்.

அவருக்கு எதிராக ஜாமினில் வெளியே வர முடியாத, 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது. துாதரகங்களை தகர்க்க சதி செய்த வழக்கில், நுாருதீன் குற்றவாளி என்று, கடந்த 7ம் தேதி தீர்ப்பும் கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில், மைசூரு ராஜிவ் நகரில் ஒரு வீட்டில் நுாருதீன் பதுங்கி இருப்பதாக, என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு அங்கு சென்ற என்.ஐ.ஏ., அதிகாரிகள் நுாருதீனை கைது செய்தனர்.

அவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து சந்தேகத்திற்கு இடமான பொருட்கள், மொபைல் போன்கள், லேப்டாப், பென்டிரைவ், ட்ரோன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்