மாற்றுப்பாலினத்தினர் மீதான தாக்குதல்! - 13% சதவீதத்தால் அதிகரிப்பு..!
17 வைகாசி 2024 வெள்ளி 05:04 | பார்வைகள் : 4020
பிரான்சில் மாற்றுப்பாலினத்தினர் மீதான தாக்குதல் கடந்த 2023 ஆம் ஆண்டில் 13% சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.
சென்ற 2023 ஆம் ஆண்டில் பிரான்சில் 4,560 தாக்குதல்கள் மாற்று பாலினத்தினர் (LGBT+) மீது பதிவாகியுள்ளது. 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 13% சதவீதத்தால் அதிகமாகும். தாக்குதல்கள், அவமதிப்பு, துன்புறுத்தல்கள், அவதூறுகள் போன்றன அவர்கள் மீது பதிவாகியுள்ளதாக உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
சென்ற ஆண்டின் மொத்த தாக்குதல்களில் 28% சதவீதமானவை பரிசில் இடம்பெற்றுள்ளதாகவும், ஏனயவை மார்செய், லியோன் போன்ற பெரு நகரங்களில் பதிவானவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.