Paristamil Navigation Paristamil advert login

தளபதி 68 படம் தொடர்பில் வெங்கட் பிரபு அதிரடி..!

தளபதி 68 படம் தொடர்பில் வெங்கட் பிரபு அதிரடி..!

21 ஆவணி 2023 திங்கள் 15:38 | பார்வைகள் : 3931


’தளபதி 68’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படம் உருவாக உள்ளது. மேலும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை வெங்கட் பிரபு கவனித்து வருவதாகவும் குறிப்பாக இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் பணியில் அவர் இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஏற்கனவே இந்த படத்தில் விஜய் ஜோடியாக ஜோதிகா மற்றும் பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்திற்கு சித்தார்த்தன் நுனி என்பவர் ஒளிப்பதிவாளராக பணி செய்யப் போகிறார் என்று கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே தமிழில் ’வெந்து தணிந்தது காடு’ ’கேப்டன் மில்லர்’ போன்ற படங்களிலும், கன்னடத்தில் ’லூசியா’ உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இந்த படத்தில் யார் யாரெல்லாம் இணைவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்