ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தவேண்டும் - தென்னாபிரிக்கா வேண்டுகோள்
17 வைகாசி 2024 வெள்ளி 09:42 | பார்வைகள் : 2539
ரபாமீதான தாக்குதலை இஸ்ரேல் கைவிடவேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என தென்னாபிரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
தென்னாபிரிக்க சட்டத்தரணிகள் எழுத்துமூலம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஏழு மாத காசா யுத்தம் 35000 பேரை கொலை செய்துள்ளதுடன் காசாவை தரைமட்டமாக்கியுள்ளது எனஅவர்கள் தெரிவித்துள்ளனர்.
துயரம் என்பது மிகமோசமானதாக காணப்படுவதால் உணவு மருந்து போன்றவற்றை காசாவிற்குள் கொண்டு செல்வதற்கு யுத்தநிறுத்தம் அவசியமாகின்றது என தென்னாபிரிக்காசட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலின் தரைத்தாக்குதலை ரபா எதிர்கொண்டுள்ளது இது பாலஸ்தீனியர்களின் வாழ்க்கையின் அடித்தளத்தையே அழித்துவிடும் என தென்னாபிரிக்க சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.