ஜப்பானில் அதிகரிக்கும் நட்பு திருமணங்கள் - காரணம் என்ன..?
17 வைகாசி 2024 வெள்ளி 09:59 | பார்வைகள் : 5423
ஜப்பானில் சமீப காலமாக நட்பு திருமணங்கள் அதிகரித்து வருகிறதாக கூறப்படுகின்றது.
அந்தவகையில் ஜப்பானில் 2015-ம் ஆண்டு முதல் சுமார் 500 பேர் இந்த நட்பு திருமணங்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த உறவில் 2 பேர் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டு ஒன்றாக குழந்தைகளை பெறலாம். ஆனால் ஒருவருக்கொருவர் உடலுறவு கொள்ள வேண்டாம் அல்லது கணவன்- மனைவியாக இருக்க வேண்டாம் என முடிவு செய்கிறார்கள்.
எனவே பொதுவாக குழந்தைகளை ஒன்றாக பெற்றுக்கொள்ள மற்ற மருத்துவ வழிகளை தேர்வு செய்கிறார்கள். அதேசமயம் இதுதொடர்பாக தம்பதிகள் ஒப்பந்தங்கள் செய்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த திருமணங்களில் ஈடுபடும் தம்பதியர் சராசரிக்கும் மேல் வருமானம் உள்ளவர்கள் என்பதுடன், அதில் பெரும்பாலானோர் உடலுறவை வெறுப்பவர்கள் அல்லது ஒரினச்சேர்க்கையாளர்களாக இருப்பார்கள் என்பதையும் காட்டுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan