பிரபாஸ் திருமண அறிவிப்பை வெளியிட்டாரா ?

17 வைகாசி 2024 வெள்ளி 09:57 | பார்வைகள் : 5119
நடிகர் பிரபாஸ் 44 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கும் நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் செய்துள்ள ஒரு பதிவு அவரது திருமணம் குறித்து பதிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் ’பாகுபலி’ ’பாகுபலி 2’ படங்களின் மூலம் உலக அளவில் பிரபலமானார் என்பதும் அடுத்தடுத்து அவர் பிரமாண்டமான படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்தது. குறிப்பாக சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கல்கி 2898 ஏடி’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசன், அமிதாப்பச்சன் உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் 44 வயதாகியும் முரட்டு சிங்கிளாக இருக்கும் பிரபாஸ் எப்போது திருமணம் செய்து கொள்வார் என்று அவரது ரசிகர்கள் அவ்வப்போது கேள்வி எழுப்பி வந்தனர். மேலும் அனுஷ்கா ஷெட்டி உட்பட பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட போதிலும் அவர் தனது திருமணம் குறித்த எந்தவித அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ’டார்லிங்ஸ்.. இறுதியாக மிகவும் சிறப்பு வாய்ந்த ஒருவர் என் வாழ்க்கையில் நுழையுள்ளார், ஆர்வத்துடன் காத்திருங்கள்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவை அடுத்து ஏராளமான ரசிகர்கள் அவர் தனது திருமணம் குறித்து அறிவிப்பை தான் வெளியிட்டுள்ளார் என்றும் மணமகள் யார் என்பதை விரைவில் அறிவிப்பார் என்றும் கூறி வருகின்றனர்.
பிரபாஸின் இந்த பதிவு அவரது திருமணம் குறித்து அறிவிப்பா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1