தாய்லாந்தில் தொடர்ந்து உயரும் கடல் மட்டம் - தலைநகருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்
17 வைகாசி 2024 வெள்ளி 10:06 | பார்வைகள் : 2837
தாய்லாந்தின் தலைநகரமான பாங்கொக், கடற்கரையை ஒட்டி தாழ்வான பகுதியில் உள்ளமையினால், மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கினால் அதிகம் பாதிக்கப்படுகிறது.
அத்துடன் நகரின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கிவிடுவதாகவும் அந் நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலநிலை மாற்றம் காரணமாக கடல் மட்டம் அதிகரிப்பதால் தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கிற்கு கூடுதல் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் பாங்கொக் நகரின் தாழ்வான பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
எனவே, நாட்டின் தலைநகரான பாங்கொக்கை இடமாற்றம் செய்வது தொடர்பாக அரசு பரிசீலனை செய்யலாம் என அந்நாட்டின் காலநிலை மாற்ற அலுவலக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடல் நீர் நகருக்குள் வருவதை தடுக்க, நெதர்லாந்தில் பயன்படுத்தப்படுவதைப் போல, தடுப்புகளை அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை பாங்கொக் நகர நிர்வாகம் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.