Paristamil Navigation Paristamil advert login

டெக்சாஸ் மாகாணத்தில் பாரிய புயல் தாக்குதல்

டெக்சாஸ் மாகாணத்தில் பாரிய புயல் தாக்குதல்

17 வைகாசி 2024 வெள்ளி 10:08 | பார்வைகள் : 5619


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டனை தாக்கிய கடுமையான புயல் காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

புயலின் தாக்கத்தால் சுமார் 800,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக நகர மேயர் தெரிவித்தார்.

புயலின் தாக்கத்தால் நகரில் பல கட்டிடங்கள், வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், நெடுஞ்சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மாநிலம் முழுவதும் இடியுடன் கூடிய மழையுடன் மணிக்கு 129 -161 கிமீ வேகத்தில் வீசும் காற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் அரச பாடசாலைகள்  மூடப்படும் என்றும், அத்தியாவசியமற்ற அனைத்து ஊழியர்களையும் அன்றைய தினம் விடுமுறை எடுக்குமாறும் உள்ளூர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்லதாகவும் கூறப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்