மாம்பழ கேசரி
17 வைகாசி 2024 வெள்ளி 10:10 | பார்வைகள் : 1343
கோடை காலம் வந்துவிட்டது, இந்த பருவத்தில் தவிர்க்க முடியாத ஒன்று மாம்பழம். மாம்பழம் அதன் இனிப்பு சுவை, ஜூசி கூழ், நறுமணம் மற்றும் நீண்ட காலமாக ஏராளமான மக்களுக்கு பிடித்த கோடை பழமாக உள்ளது. மேலும் இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
எனவே குழந்தைகளுக்கு பிடித்தவாறு சுவையான மாம்பழ கேசரியை வீட்டிலேயே 15 நிமிடத்தில் எளிதாக எப்படி செய்து அசத்தலாம் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள் :
மாம்பழம் - 1
ரவை - 2 கப்
பால் - 2 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - தேவையான அளவு
முந்திரி - 10
உலர் திராட்சை - 10
தண்ணீர் - 2 கப்
செய்முறை :
முதலில் மாம்பழத்தின் சதைப்பகுதியை மட்டும் எடுத்து மிக்ஸியில் அடித்து எடுத்து தனியே வைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து நெய் ஊற்றி சூடானதும் மிதமான தீயில் ரவை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு அதே கடாயில் மேலும் சிறிதளவு நெய் சேர்த்து முந்திரி மற்றும் உலர் திராட்சையை போட்டு ஒரு நிமிடம் மிதமான தீயில் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் மாம்பழக்கூழ், சர்க்கரை, பால் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின்னர் அதை அடுப்பில் வைத்து குறைத்த தீயில் சர்க்கரை முழுவதுமாக கரையும் வரை நன்கு கிளறிவிடவும்.
தற்போது அடி கனமான கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து மீதான தீயில் சூடாக்கவும்.
கடாய் சூடானதும் வறுத்த ரவை மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
ரவை நன்கு வெந்து தண்ணீர் கிட்டத்தட்ட வற்றும் தருவாயில் மாம்பழக் கூழ் கலவையைச் சேர்த்து நன்கு கிளறவும்.
இவை கெட்டியாகத் தொடங்கும் போது அடுப்பை அணைத்து அதில் சிறிதளவு நெய் ஊற்றி அதனுடன் வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்த்து கலந்துகொள்ளவும்.
அவ்வளவுதான் சுவையான மாம்பழ கேசரி சாப்பிட தயார்.