Paristamil Navigation Paristamil advert login

பிரெஞ்சுப் பாணை பெருமைப் படுத்தும் விதத்தில் முத்திரை வெளியீடு!

பிரெஞ்சுப் பாணை பெருமைப் படுத்தும் விதத்தில் முத்திரை வெளியீடு!

18 வைகாசி 2024 சனி 05:08 | பார்வைகள் : 6649


பிரெஞ்சுப் பாண் (baguette ) இனை பெருமைப்படுத்தும் வகையில், பிரெஞ்சுத் தபாலகம் முத்திரை ஒன்றினை வெளியிட்டுள்ளது. 

நேற்று முன்தினம் மே 16, வியாழக்கிழமை இந்த முத்திரை Boulazac (Dordogne) நகர தபாலகத்தில் வைத்து வெளியிடப்பட்டது. வெதுப்பகத்தினருக்கான கொண்டாட நாளான ’Saint Honoré’ இனை சிறப்பிக்கும் முகமாக இந்த முத்திரை தாள், வெதுப்பியின் ‘மணம்’ சேர்க்கப்பட்டு அச்சிடப்பட்டுள்ளது.

முத்திரையை விரல்களால் தேய்த்துவிட்டு நுகர்ந்து பார்த்தால், பிரெஞ்சுப் பாண் ஒன்றின் வாசத்தை தரும். 

மொத்தமாக 594,000 முத்திரைகள் அச்சிடப்பட்டுள்ளன. 1.96 யூரோக்களுடைய இந்த முத்திரையை உங்களுக்கு அதிஷ்ட்டம் இருந்தால் அருகில் உள்ள தபாலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்