3,200 பயணிகள் விமான நிலையத்தில் முடக்கம்! - ஆறாவது படுகொலை! - உச்சக்கட்ட பரபரப்பில் Nouvelle-Calédonie!
18 வைகாசி 2024 சனி 08:22 | பார்வைகள் : 4247
**
Nouvelle-Calédonie தீவில் ஏற்பட்டுள்ள பெரும் வன்முறை காரணமாக அங்கு விமான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. தலைநகர் Noumea தீவில் உள்ள விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமையில் இருந்து மூன்று விமானங்கள் தடைப்பட்டுள்ளன. இதனால் அங்கு 3,200 பயணிகள் அங்கிருந்து புறப்பட முடியாமல் தவித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
**
நேற்று பிரான்ஸ் நேரம் பிற்பகல் 2.30 மணி அளவில் ( Nouvelle-Calédonie நேரப்படி மாலை 5.30) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தோடு, Nouvelle-Calédonie தீவில் இடம்பெற்று வரும் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்வடைந்துள்ளது.
**
ஒலிம்பிக் தீபம் நாடு முழுவதும் கொண்டுசெல்லப்பட்டுக்கொண்டிருப்பது அறிந்ததே. இந்நிலையில், Nouvelle-Calédonie தீவுக்கு தீபம் வரும் ஜூன் 16 ஆம் திகதி கொண்டுசெல்லப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அங்கு தீபம் கொண்டுசெல்லப்படமாட்டாது என பிரதமர் கேப்ரியல் அத்தால் அறிவித்துள்ளார்.