தாய்வான் நாடாளுமன்றத்தில் விவாதத்தின் போது அடிதடி
18 வைகாசி 2024 சனி 08:49 | பார்வைகள் : 3501
தாய்வான் நாடாளுமன்ற சீர்திருத்தம் தொடர்பான விவாதத்தின் போது தாய்வான் நடாளுமன்ற உறுப்பினர்கள் அடிதடியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீர்திருத்தங்கள் தொடர்பான கடுமையான சர்ச்சையின் போது அவர்கள் ஒருவரையொருவர் தள்ளிவிட்டு மோதிக்கொண்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்துள்ளது.
தாய்வானின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Lai Ching-te, எதிர்வரும் திங்கட்கிழமை பதவியேற்கவுள்ளார். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனாதிபதி Lai Ching-te வெற்றி பெற்றார், ஆனால் அவரது ஜனநாயக முற்போக்கு கட்சி (DPP) நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற சீர்திருத்தத்தின் போது பாராளுமன்றத்தில் பொய்யான அறிக்கைகளை வெளியிடும் அதிகாரிகளை குற்றவாளிகளாக்கும் சர்ச்சைக்குரிய பிரேரணை உட்பட அரசாங்கம் தொடர்பில் நாடாளுமன்றத்திற்கு மேலதிக விசாரணை அதிகாரங்களை வழங்க எதிர்க்கட்சி விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.