Vitry-sur-Seine : காவல்துறை வீரரை பல மீற்றர் தூரம் இழுத்துச் சென்ற சாரதி கைது!

18 வைகாசி 2024 சனி 11:02 | பார்வைகள் : 9425
காவல்துறை வீரர் ஒருவரை பல மீற்றர் தூரம் இழுத்துச் சென்ற மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை மாலை இச்சம்பவம் Vitry-sur-Seine (Val-de-Marne) நகரில் இடம்பெற்றுள்ளது. Avenue Rouget-de-Lisle பகுதியில் இரவு 11 மணி அளவில் ஸ்கூட்டரில் பயணித்த ஒருவர், சிவப்பு சமிக்ஞையை மீறிச் செல்வதை காவல்துறையினத் கவனித்தனர்.
அதையடுத்து, குறித்த நபரை தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் குறித்த நிற்காமல் தொடர்ந்து பயணிக்க, காவல்துறை வீரர் அவரை மடக்கிப் பிடிக்க முயற்சித்துள்ளார்.
அதன்போது காவல்துறை வீரர் மோட்டார் சைக்கிளில் சிக்கிக்கொண்டுவிட, அவரை இழுத்துக்கொண்டு சென்றுள்ளார். பல மீற்றர் தூரத்துக்கு காவல்துறை வீரர் இழுத்துச் செல்லப்பட்டார்.
காவல்துறை வீரர் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிள் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025