இந்தியாவை 3 வது பெரிய பொருளாதார நாடாக மாற்றுவோம்: பிரதமர்
18 வைகாசி 2024 சனி 15:34 | பார்வைகள் : 1866
தேர்தலில் பா.ஜ.,,வெற்றி பெற்றால் இந்தியாவை மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்றுவோம் என டில்லியில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
டில்லியில் உள்ள ஏழு தொகுதிக்கும் வரும் 25ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஏழு தொகுதிகளிலும் பா.ஜ., நேரிடையாக போட்டியிடுகிறது.
டில்லியின் வடகிழக்கு தொகுதியில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
உங்களுடைய அன்பு , ஆசிர்வாதம் அனைத்திற்கும் நான் தலை வணங்குகிறேன். இந்தியாவில் உள்ள 140 கோடி மக்கள் என் குழந்தைகள். இந்த தேர்தல் இந்தியாவை உலகின் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாற்றும். இந்த தேர்தலும் நாட்டின் பொருளாதாரத்தை தனது கொள்கைகளால் திவாலாக்க நினைக்கும் சக்திகளிடமிருந்து பாதுகாக்கும். ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் செல்வத்தைப் பறிக்க நினைப்பவர்களிடமிருந்து பாதுகாக்கவும்.டில்லியை பிரகாசமாக ஒளிரச்செய்ய பா.ஜ.,வை 7 தொகுதிகளிலும் வெற்றியடையச்செய்யுங்கள் என பேசினார்.
தொடர்ந்து சிஏஏ-ன் கீழ் இந்திய குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் அகதிகளை சந்தித்து உரையாடினார் பிரதமர் மோடி.