Paristamil Navigation Paristamil advert login

சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஜோகோவிச்!

சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஜோகோவிச்!

22 ஆவணி 2023 செவ்வாய் 06:56 | பார்வைகள் : 4788


செர்பிய டென்னிஸ் நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச் சின்சினாட்டி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

அமெரிக்காவில் நடந்த சர்வதேச சின்சினாட்டி ஓபன் டென்னிஸின் இறுதிப் போட்டியில் ஜோவாக் ஜோகோவிச் மற்றும் கார்லஸ் அல்காரஸ் மோதினர்.

பரபரப்பாக நடந்த இந்தப் போட்டி 3 மணி 49 நிமிடங்கள் நீடித்தது.

ஒரு கட்டத்தில் அல்காரஸ் 6-5 என்ற செட் கணக்கில் முன்னிலை வகித்தார்.

ஆனால், ஜோகோவிச் அடுத்தடுத்து புள்ளிகளை எடுத்து அந்த செட்-ஐ தனதாக்கினார்.

இறுதியில் 5-7, 7-6 (9-7), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் அல்காரசை வீழ்த்தினார் ஜோகோவிச். இது அவரது 39வது மாஸ்டர்ஸ் கோப்பை ஆகும்.

மேலும், ஒட்டுமொத்தத்தில் 95வது சர்வதேச பட்டமாக அமைந்தது. 36 வயதாகும் ஜோகோவிச் வெற்றி பெற்றதும் உற்சாகமிகுதியில் தனது பனியனை கிழித்துக் கொண்டு கத்தினார்.  

கடந்த மாதம் அல்காரஸிடம் விம்பிள்டன் பட்டத்தை இழந்ததற்கு ஜோகோவிச் இம்முறை பழி தீர்த்துக் கொண்டார்.

வெற்றி குறித்து பேசிய ஜோகோவிச் கூறுகையில், 'இது ஒரு ரோலர் கோஸ்டர் மற்றும் நிச்சயமாக நான் எந்தப் போட்டியிலும் ஒரு பகுதியாக இருந்த கடிமான மற்றும் மிகவும் உற்சாகமான போட்டிகளில் ஒன்றாகும். இது ஒரு கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டி போல் உணர்ந்தேன், அதை விட அதிகமாக, நேர்மையாக இருக்க வேண்டும்' என தெரிவித்தார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்