எகிப்து பிரமிடுகள் தொடர்பில் ஆய்வாளர்களின் புதிய கண்டுபிடிப்பு
19 வைகாசி 2024 ஞாயிறு 09:56 | பார்வைகள் : 1867
எகிப்தில் சுமார் 3700 முதல் 4700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பிரமிடுகள் உலக அதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அது எப்படி கட்டப்பட்டது, அந்த பாறைகள் எவ்வாறு கொண்டு வரப்பட்டிக்கும் என்பது பல ஆண்டுகளாக புதிராகவே இருந்து வந்தது.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள பல்கலைகழகம் நடத்திய ஓர் ஆய்வில் இதன் புதிர்களை கண்டறிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதன்படி எகிப்தில் நைல் நதியின் 64 கிலோ மீட்டர்கள் கொண்ட கிளை நதி ஒன்று இருந்ததாகவும், அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாலைவனத்தாலும் விவசாய நிலங்களாலும் மறைந்திருந்தது என்று வட கரோலினா வில்மிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த பிரமிடுகளுக்கு அருகில் இந்த நதி இருந்ததாகவும், பிரமிடுகளை கட்ட மிகப்பெரிய பாறைகளை கொண்டு வர இந்த நதிகளை தான் பயன்படுத்தி இருப்பர் என்று கணிக்கிறார்கள்.
இதை கண்டறிய ரேடார் செயற்கைக்கோள் படங்கள் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாகவும், 31 பிரமிடுகளின் வரிசைகள் கொண்டும் இந்த நதியின் பாதை குறித்து ஆராய்ந்து வருவதாகவும் பேராசிரியர் எமன் கோனிம் தெரிவிக்கிறார்.
மேலும், அவர், ரேடார் செயற்கைக்கோள் படங்கள் தொழில்நுட்பம் மூலம், மணலுக்கு அடியில் இருக்கும் நிலப்பதிகுதை கண்டறிந்து அதன் புகைப்படங்களை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
மேலும் அந்த நதியின் பாதை மற்றும் அளவை இன்னும் சரியாக கண்டறியவில்லை என்றும் அந்த தொழில்நுட்பத்தை வைத்து அப்போது இருந்த வரைபடத்தை கண்டறியப்போவதாகவும் தெரிவித்தார்.