Paristamil Navigation Paristamil advert login

சிங்கப்பூரில் மீண்டும் கொரோனாவின் அச்சுறுத்தல்..! 

சிங்கப்பூரில் மீண்டும் கொரோனாவின் அச்சுறுத்தல்..! 

19 வைகாசி 2024 ஞாயிறு 10:01 | பார்வைகள் : 2383


சீனாவின் வுகான் மாகாணத்தில் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதுடன் அது உலக அளவில் லட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்திய பின்னர் படிப்படியாக கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தது. 

இந்த நிலையில் சிங்கப்பூரில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

கடந்த 5ஆம் திகதி முதல் 11ஆம்திகதி வரை சிங்கப்பூரில் புதிதாக 25,900பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

அங்கு தினந்தோறும் சராசரியாக 250 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும், இதில் சராசரியாக தினமும் 3 பேர் தீவிர சிகிச்சைப் பரிவில் சேர்க்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பிரத்தியோக அறையை தயார் நிலையில் வைக்க வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து சிங்கப்பூர் சுகாதாரத்துறை மந்திரி ஆங் யே குங் கூறுகையில், "நாம் கொரோனா தொற்றுடன் வாழ்வதற்கு பழக வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் புதிதாக கொரோனா பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கூடுதல் பாதுகாப்பிற்காக மேலும் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம்" என்று தெரிவித்துள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்