துபாயில் பாடசாலை பேருந்துகளில் புதிய முயற்சி RTA ஒப்புதல் - போக்குவரத்து ஆணையம்
19 வைகாசி 2024 ஞாயிறு 10:12 | பார்வைகள் : 3768
துபாயில் பாடசாலை பேருந்துகளில் விளம்பரத்தரங்கள் ஒட்டுவது குறித்து புதிய மாற்றம் எடுக்கவுள்ளதாக போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
அதாவது பாடசாலைப் பேருந்துகளில் விளம்பரம் செய்ய துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் ஒப்புதல் விளம்பரங்களை காண்பிப்பதன் மூலம் பள்ளிப் போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு கூடுதல் வருவாயை வழங்குதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
துபாய் முழுவதும் சாலை ஓரங்களில் அமைக்கப்படடுள்ள திரைகள், பொது பேருந்துகள், டாக்ஸி என பல விருப்பங்களின் மூலமாகவும் விளம்பரம் மற்றும் தள்ளுபடிக்கான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பாடசாலை பேருந்துகளிலும் இது போன்ற விளம்பரங்கள் மற்றும் பிரச்சாரங்களை கூடிய விரைவில் நம்மால் காண முடியும்.
இந்த விளம்பரங்கள், பாடசாலை மாணவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்கும் வகையில், தயாரிப்புகள் மற்றும் சலுகைகளை தரநிலைகள் மற்றும் தேவைகளுக்கு இணங்க வேண்டும் என்று RTA தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ,RTA வில் உள்ள பொதுப் போக்குவரத்துக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் வணிக மேம்பாட்டுத்துறை இயக்குநர் அடெல் ஷக்ரி, பாடசாலை பேருந்துகளை இயக்கும் நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விளம்பரத்தரங்கள் மற்றும் தேவைகள் குறித்து விவரித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
அமீரக சட்டங்களின் படி, விளம்பரங்கள் மாணவர்களுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் மற்றும் சரியான கொள்கைகள் மூலம் விளம்பர அனுமதி மற்றும் துபாய் முனிசிபாலிட்டியிடமிருந்து விளம்பரத்தின் உள்ளடக்கத்திற்கான ஒப்புதல் போன்றவை அவசியம் என்றார்.
மேலும், கவனச்சிதறலைத்தடுக்க ஓட்டுநருக்கு பின்னால் ஆட்போர் விளம்பரத்திரைககள் வைக்கப்பட வேண்டும்.
எந்த விளம்பரங்கள் கதவுகள் அல்லது அவசரகால எக்ஸிட்களைத் தடுக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
அது மட்டுமின்றி, பேருந்துகளின் வெளிப்புறத்திலுள்ள விளம்பரங்கள் பாடசாலை பேருந்து என்ற பலகையை மறைக்கவோ அல்லது ஓட்டுநரின் பார்வையைத் தடுக்கவோ கூடாது, குறிப்பாக பின்பக்க கண்ணாடியில் விளம்பரம் செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.