முன்னாள் காதலனுடன் கைகோர்த்த வனிதா...
19 வைகாசி 2024 ஞாயிறு 13:02 | பார்வைகள் : 13507
வனிதா விஜயகுமார், தன்னுடைய முதல் படத்திலேயே தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்த போதிலும்... ஏனோ இவரின் திரையுலக வாழ்க்கை ஏறுமுகமாக அமையவில்லை. எண்ணி 5 படங்கள் மட்டுமே நடித்து விட்டு, தன்னுடைய 18 வயதிலேயே திரையுலகில் இருந்து மூட்டை முடிச்சை கட்டினார்.
வனிதா தன்னுடைய கணவர், ஆகாஷ் மற்றும் ஆனந்தை பிரிந்த பின்னர்... நடன இயக்குனர் ராபர்டை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை தயாரித்தார். ’எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்’ என பெயரிடப்பட்ட இந்த படத்தில் வனிதாவே ஹீரோயினாகவும் நடித்தார்.
ஆனால் படு மோசமான விமர்சனங்களுடன் இந்த படம் தோல்வியை தழுவியது. இந்த படத்தில் இணைந்து நடிக்கும் போது வனிதாவும், ராபர்டும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறப்பட்டது. வனிதாவின் பெயரை ராபர்ட் பச்சை குத்தி கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் எல்லாமே பட புரோமோஷனுக்கு தான் என்றும், எங்கள் இருவருக்கும் இடையே ஒண்ணுமே இல்லை என இருவரும் தங்களுடைய பாதையில் பயணிக்க துவங்கினர்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மீண்டும் இவர்களின் விவகாரம் அதிகம் பேசப்பட்ட நிலையில், பின்னர் ஓய்ந்தது. தற்போது 'மிஸ்டர் அண்ட் மிஸஸ்' படத்திற்காக மீண்டும் வனிதா விஜயகுமாரும் - ராபர்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். இந்த படத்தில் வனிதாவின் அப்பா அம்மாவாக ஸ்ரீகாந்த் மற்றும் ஷகிலா நடிப்பதாகவும், முக்கிய கேரக்டரில் பிரேம்ஜி, சுனில் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் வனிதாவின் மகள் ஜோவிகா தயாரிப்பு துறையில் ஒரு முக்கிய பணியை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு தொழில் அதிபர் தயாரிக்க உள்ளாராம். இவர் வனிதா விஜயகுமாரின் நெருங்கிய நண்பர் என கூறப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan