Paristamil Navigation Paristamil advert login

காஸாவில் ஆடையின்றி ஊர்வலம்  செய்த ஜெர்மானியப் பெண்...!

காஸாவில் ஆடையின்றி ஊர்வலம்  செய்த ஜெர்மானியப் பெண்...!

19 வைகாசி 2024 ஞாயிறு 14:44 | பார்வைகள் : 2502


ஹமாஸ் படைகளால் கடத்தப்பட்டு, காஸா தெருக்களில் ஆடையின்றி ஊரவலம் நடத்தப்பட்ட இளம் பெண் தொடர்பில் அவரது பெற்றோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தெற்கு இஸ்ரேலில் கடந்த ஒக்டோபர் 7 தாக்குதலின் போது ஹமாஸ் படைகளிடம் சிக்கிய 23 வயது பெண் ஒருவரின் சடலம் சமீபத்தில் மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த பெண் தொடர்பில் வெளியான காணொளி அப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

லொறி ஒன்றில் துப்பாக்கிதாரிகள் பலருடன் ஆடையின்றி அவர் காணப்பட்டதுடன், காஸா தெருக்களில் அவர் ஊர்வலமாகவும் நடத்தப்பட்டுள்ளார். 

23 வயதான Shani Louk ஜெர்மனியை சேர்ந்த இஸ்ரேல் நாட்டவர்.

சம்பவத்தன்று இஸ்ரேலுக்குள் நோவா இசை விழாவில் நண்பர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். 

இந்நிலையிலேயே திடீரென்று ஹமாஸ் படைகள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் Shani Louk ஹமாஸ் படைகளிடம் சிக்கியுள்ளார். 

இந்நிலையில், காஸாவில் இஸ்ரேலிய கமாண்டோக்களால் அவரது உடலைக் கண்டுபிடித்ததாக பெற்றோருக்கு வெள்ளியன்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளனர்.

குறித்த தகவலை Nissim Louk உறுதி செய்துள்ளதுடன், தமது மகளின் புகைப்படங்களையும் பார்வையிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இனி அவர் தனக்கான மண்ணில் தங்களுக்கு அருகில் ஓய்வெடுக்கலாம் என்றும், எப்போதெல்லாம் ஆசைப்படுகிறோமே அப்போது அங்கே செல்ல முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இனி அவர் எந்த அச்சமும் இன்றி ஓய்வெடுக்கட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

இறுதிச்சடங்குகள் ஞாயிறன்று முன்னெடுக்கப்படும் எனவும் Nissim Louk தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் மாத இறுதியில் Shani Louk இறந்திருக்கலாம் என்றே இஸ்ரேலிய அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கின்றனர். 

நோவா இசை விழா நடந்த பகுதியில் சுமார் 360 பேர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டும், ஆயுதங்களால் தாக்கியும், உயிருடன் கொளுத்தப்பட்டும் மரணமடைந்துள்ளனர்.

அக்டோபர் 7 தாக்குதலில் சுமார் 1,200 பேர்கள் கொல்லப்பட்டனர். 

250க்கும் அதிகமானோர் ஹமாஸ் படைகளால் கடத்தப்பட்டனர். 

இதற்கு பழிவாங்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் முன்னெடுத்துவரும் தாக்குதலில் இதுவரை பலியான பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 35,000 கடந்துள்ளது.

கடலோரப் பகுதியின் பெரும்பாலான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 

இஸ்ரேல் ராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதலால், காஸா சின்னா பின்னமாகியுள்ளது.


 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்