Seine-Saint-Denis : பூனை ஒன்றுக்காக சேகரிக்கப்பட்ட €46,000 யூரோக்கள்..!
19 வைகாசி 2024 ஞாயிறு 14:53 | பார்வைகள் : 4026
Seine-Saint-Denis நகரைச் சேர்ந்த பூனை ஒன்றுக்காக €46,000 யூரோக்கள் நன்கொடை சேகரிக்கப்பட்டுள்ளது.
மே 1 ஆம் திகதி நபர் ஒருவர் Bondy (Seine-Saint-Denis) நகரின் வீதி ஒன்றில் வைத்து பூனை ஒன்றை மீட்டுள்ளார். பூனை காயமடைந்த நிலையில், ஒற்றைக் காலை இழுத்துக்கொண்டு நடக்கும் காட்சி காணொளியாக பதிவு செய்யப்பட்டு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டது.
feline என பெயரிடப்பட்ட அந்த நான்கரை மாத பூனைக்குட்டியை பராமரிக்கும் செலவை பொதுமக்களே ஏற்றுக்கொண்டனர். நன்கொடை சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், இதுவரை 46,000 யூரோக்கள் நன்கொடை சேகரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, குறித்த பூனையை வீதியில் விட்ட உரிமையாளர் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளமையும், வழக்கு தொடர்ந்து இடம்பெற்று வருகிறமையும் குறிப்பிடப்பத்தக்கது.