ஆசிய கோப்பையில் தமிழக வீரர்கள் இல்லை - காரணம் என்ன...?
22 ஆவணி 2023 செவ்வாய் 10:52 | பார்வைகள் : 2616
ஆசிய கோப்பை தொடருக்கான அணியில், தமிழக வீரர்களான அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெறாதது குறித்து கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார்.
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் 30ஆம் திகதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
இதில் தமிழக வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சஹால் ஆகியோர் இடம்பெறவில்லை.
இந்த நிலையில், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்படாதது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், 'அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரையும் நாங்கள் அணியில் எடுக்க நினைத்தோம். நாங்கள் அவர்களை சேர்க்க ஒரே வழி ஒரு வேகப்பந்து வீச்சாளரை தவறவிடுவது தான்.
அடுத்த இரண்டு மாதங்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் பாரிய பங்கை வகிக்கப் போவதனால் எங்களால் இதை செய்ய முடியாது' என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, ஆனால் அனைவருக்கும் கதவு திறந்தே உள்ளது.
உலகக்கோப்பையில் சாஹல் தேவைப்பட்டால், நாங்கள் அவரை உள்ளே இழுக்க முயற்சிப்போம். அஸ்வின் மற்றும் வாஷிங்டனுக்கும் இது பொருந்தும் என கூறியுள்ளார்.