Sécurité sociale : விநியோகிக்கப்படாத 5.5€ பில்லியன் யூரோக்கள்..!
19 வைகாசி 2024 ஞாயிறு 15:36 | பார்வைகள் : 4828
2023 ஆம் ஆண்டில் சரியான விதத்தில் விநியோகிக்கப்படாமல் €5.5 பில்லியன் யூரோக்கள் மீதமிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் வழங்கப்படும் சமூகநலக்கொடுப்பனவுகள் (Caisse nationale d'allocations familiales -Cnaf) கடந்த 2023 ஆம் ஆண்டில் தவறுதலாக விநியோகிக்கப்பட்டும், கொடுப்பனவுகள் வழங்கப்படாமலும் இருந்துள்ளன. அவ்வாறு வழங்கப்படாமல் இருந்த தொகை மொத்தமாக €5.5 பில்லியன் யூரோக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2022 ஆம் ஆண்டில் இந்த தொகை €5.8 பில்லியன் யூரோக்களாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.