Paristamil Navigation Paristamil advert login

Eure தாக்குதல் : கொல்லப்பட்ட வீரர்களுக்கு ஜனாதிபதி அஞ்சலி..!

Eure தாக்குதல் : கொல்லப்பட்ட வீரர்களுக்கு ஜனாதிபதி அஞ்சலி..!

19 வைகாசி 2024 ஞாயிறு 16:53 | பார்வைகள் : 13778


சிறைச்சாலை வாகனத்தை தாக்கி, கைதி ஒருவர் தப்பியிருந்த சம்பவம் அறிந்ததே. அந்த தாக்குதலில் இரண்டு சிறைச்சாலை பாதுகாவலர்கள் கொல்லப்பட்டிருந்தனர். அவர்களுக்கான தேசிய அஞ்சலி நிகழ்வு வரும் புதன்கிழமை இடம்பெற உள்ளது.

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இந்த தேசிய அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்கிறார். இதற்காக அவர் புதன்கிழமை காலை Calvados நகரில் உள்ள Caen சிறைச்சாலைக்கு பயணிக்க உள்ளார்.

52 வயதுடைய கேப்டன் Fabrice Morello மற்றும் 34 வயதுடைய பிரிகேடியர் Arnaud Garcia ஆகிய இருவருமே துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டிருந்தனர். 

செவ்வாய்க்கிழமை நண்பகலுக்கு சற்று முன்னதாக A154 நெடுஞ்சாலையில் வைத்து இந்த தாக்குதல் இடம்பெற்றிருந்தது. சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வழியில், ஆயுத தாரிகள் தாக்குதல் மேற்கொண்டு Mohamed Amra எனும் கைதியை தப்பிச் செல்ல வைத்திருந்தனர்.

11 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    3

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்