Paristamil Navigation Paristamil advert login

ரஷ்ய விமானங்களை தாக்கி அழித்த உக்ரைன்..

 ரஷ்ய விமானங்களை தாக்கி அழித்த உக்ரைன்..

22 ஆவணி 2023 செவ்வாய் 11:00 | பார்வைகள் : 13568


ரஷ்ய உக்ரைன் போர் நீண்ட நாட்களாக இடம்பெற்று வருகின்றது.

இரு நாடுகளிலும் உயர் மற்றும் பொருள் சேதம் அதிகரித்த வண்ணமே உள்ளது.

இந்நிலையில் உக்ரைனின் ஆளில்லா விமானங்கள் ரஷ்யாவின் நீண்டதூர சுப்பர்சோனிக் குண்டுவீச்சு விமானங்களை தாக்கி அழித்துள்ளன .

அந்தவகையிஒல் சென்பீட்டர்ஸ்பேர்க்கிற்கு தெற்கே சொல்ட்சி 2 விமானதளத்தில் டுப்பொலொவ் டு22 விமானம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை உறுதி செய்ய முடிவதாக பிபிசி தெரிவித்துள்ளது.

ஆளில்லா விமானங்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதாகவும் எனினும் விமானமொன்று சேதமடைந்துள்ளதாகவும் மொஸ்கோ தெரிவித்துள்ளது.

டு 22 விமானம் ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் செல்லக்கூடியது

உக்ரைன் நகரங்களை தாக்குவதற்கு ரஸ்யா இவற்றை பயன்படுத்தியுள்ளது.

ஆளில்லா விமானதாக்குதல் சனிக்கிழமை நொவ்கொரோட் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது என ரஸ்யா தெரிவித்துள்ளது.

குறித்த பிராந்தியத்திலேயே டு 22 விமானங்களின் தளங்கள் அமைந்துள்ளன.

ஆளில்லா விமானமொன்றை வான்வெளி கண்காணிப்பு பிரிவினர் கண்டு அதன் மீது தாக்குதலை மேற்கொண்டனர் சிறிய ஆயுதங்களால் அது தாக்கப்பட்டதாகவும், இந்த தாக்குதலில் ஒரு விமானம் சேதமடைந்துள்ளபோதும் , உயிரிழப்புகள் இல்லை எனவும் ரஸ்யா தெரிவித்துள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்