Paristamil Navigation Paristamil advert login

காசாவின்  மருத்துவமனையையும் முற்றுகையிட்ட இஸ்ரேல்...!

காசாவின்  மருத்துவமனையையும் முற்றுகையிட்ட இஸ்ரேல்...!

20 வைகாசி 2024 திங்கள் 07:56 | பார்வைகள் : 10133


கசாவில் அல்அவ்டா மருத்துவமனையை இஸ்ரேலிய படையினர் முற்றுகையிட்டுள்ளனர். 

இஸ்ரேல் - ஹமாஸ் போர் ஆரம்பித்த பின்னர் காசாவின் வடபகுதியில் செயற்பட்டுக்கொண்டிருந்த ஒரேயொரு மருத்துவமனை இதுவாகும்.

மருத்துவமனையை நோக்கி எறிகணை தாக்குதலை மேற்கொண்ட பின்னர் இஸ்ரேலிய படையினர் அந்த மருத்துவமனையை சுற்றிவளைத்துள்ளனர் என தகவல்  நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மருத்துவமனைக்கு அருகில் உள்ள கட்டிடங்களை இஸ்ரேலிய படையினர் புல்டோசர்களை பயன்படுத்தி அழித்துள்ளனர்.

இஸ்ரேலிய படையினர் மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளதன் காரணமாக பொதுமக்களும் மருத்துவ சுகாதார பணியாளர்களும் மருத்துவமனைக்குள் நுழையவோ, வெளியே செல்லவோ முடியாத நிலை காணப்படுகின்றது.

சனிக்கிழமை ஜபாலியா அகதிமுகாம்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அல்அவ்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது. 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்