இலங்கைக்கு உரித்தான தங்க முதுகு தவளை இந்தியாவில்

20 வைகாசி 2024 திங்கள் 12:30 | பார்வைகள் : 13281
இலங்கைக்கே உரித்தானது என கூறப்படும் தங்கம் போல மின்னும் அபூர்வ தவளை இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது ஆந்திர மாநிலம், பலமனேறு அருகே உள்ள கவுண்டன்யா வனப்பகுதியை ஒட்டி கவுனிதிம்மேபள்ளி என்ற கிராமத்திலுள் குளத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய விலங்கியல் துறையைச் சேர்ந்த தீபா ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற தவளைகள் இலங்கையில் மட்டுமே காணப்படுகின்றன. இந்த தவளையின் முதுகு தங்க நிறத்திலும் உடல் மேல் பகுதி கருமையாகவும் உள்ளது. இதனுடைய அறிவியல் பெயர் ஹைரா கிராசிலிஸ் (Hylarana gracilis) என்பதாகும்.