Paristamil Navigation Paristamil advert login

ஐந்து மொழிகளில் ரீமேக் செய்யப்படும் பார்க்கிங்

ஐந்து மொழிகளில் ரீமேக் செய்யப்படும் பார்க்கிங்

20 வைகாசி 2024 திங்கள் 14:58 | பார்வைகள் : 763


பிக் பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாண் நடித்த திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஒரு சர்வதேச மொழி உள்பட ஐந்து மொழிகளில் இந்த படம் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

பிக் பாஸ் ஹரிஷ் கல்யாண், இந்துஜா ரவிச்சந்திரன், எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் ’பார்க்கிங்’. இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான நிலையில் இந்த படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி இருந்தார் என்பதும் இந்த படம் 17 கோடி ரூபாய் வசூல் செய்து தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’பார்க்கிங்’ திரைப்படம் வெளியான போது வெளிநாட்டு படத்தின் கதை போல் இருக்கிறது என்று சிலர் விமர்சனம் செய்த நிலையில் தற்போது ஒரு வெளிநாட்டு மொழி மற்றும் நான்கு இந்திய மொழிகள் என மொத்தம் ஐந்து மொழிகளில் இந்த படம் ரீமேக் செய்ய ஒப்பந்தமாகி இருப்பதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

’பார்க்கிங்’ திரைப்படம் திரையரங்குகளில் மற்றும் ஓடிடியில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த படத்தை பார்த்த பல வெளி மாநில தயாரிப்பாளர்கள் ரீமேக் செய்ய முன் வந்ததாகவும், ரீமேக் உரிமை நல்ல தொகைக்கு விற்பனை ஆகி உள்ளதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்போது ’நூறு கோடி வானவில்’ ’டீசல்’ மற்றும் ’லப்பர் பந்து’ ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பதும் மூன்று படங்களும் அடுத்தடுத்து இந்த ஆண்டுக்குள் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்