Paristamil Navigation Paristamil advert login

ஜப்பானில் வாழைப்பழத் தோலால்  கணவனுக்கு நேர்ந்த கதி

ஜப்பானில் வாழைப்பழத் தோலால்  கணவனுக்கு நேர்ந்த கதி

21 வைகாசி 2024 செவ்வாய் 07:51 | பார்வைகள் : 1175


ஜப்பானில் மனைவியை வாழைப்பழத் தோலால் அடித்து தாக்கிய கணவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து ஜப்பானின் ஃபுகுவோகாவில் உள்ள குராத்தே பகுதியில் பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து கணவர் கைது செய்யப்பட்டார்.

கணவர் மது அருந்திவிட்டு தன்னை துஷ்பிரயோகம் செய்து வாழைப்பழத்தோலை வீசியதாக மனைவி முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் வாழைப்பழத்தோலால் மனைவியை தாக்கியதை கணவன் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் மனைவி முறைப்பாடு செய்துள்ளார்.

“தனது மனைவி தனக்கு எதிராக பேசியதால் ஆத்திரமடைந்ததாகவும், இதனால் மனைவியை வாழைப்பழத்தோலால் தாக்கியதாகவும் அவர் கூறினார்.

மேலும், தன்னைப் பொறுத்த வரையில் இது வன்முறையல்ல என கணவர் பொலிஸ் நிலையத்தில் அதிகாரிகளிடம் தெரிவித்தார். "ஒருவரைப் பொருளால் அடிப்பது குற்றம்" என்றும் வாழைப்பழத்தால் அடிப்பது கூட குற்றம் என்று கணவரிடம் போலிஸார் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்