Paristamil Navigation Paristamil advert login

XL Bully இன நாய்கள் தாக்கியதில் பெண் பலி - அதிர்ச்சி சம்பவம்

XL Bully இன நாய்கள் தாக்கியதில் பெண் பலி - அதிர்ச்சி சம்பவம்

21 வைகாசி 2024 செவ்வாய் 09:29 | பார்வைகள் : 3630


பிரித்தானியாவின்  கிழக்கு லண்டனின் ஹார்ன்ச்ர்சில்(Hornchurch) கார்ன்வால் குளோசில்(Cornwall Close) வசிக்கும் 50 வயதான பெண் திங்கட்கிழமை மதியம் வீட்டு நாய்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.

மெட்ரோபொலிட்டன்  பொலிஸார், நாய் தாக்குதல் குறித்த தகவல்களை பெற்ற பிறகு சுமார் 1:12 மணியளவில் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டதாக உறுதி செய்துள்ளது.  

"சம்பவ இடத்திற்கு சென்ற போது, நாய் தாக்குதலில் காயமடைந்த பெண்ணைக் கண்டோம்,"  "உடனடியாக மருத்துவ சேவைகள் அழைக்கப்பட்டன.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சம்பவ இடத்திலேயே அந்த பெண் இறந்து விட்டார்” என்று மெட்ரோபொலிட்டன் பொலிஸாரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

சூழ்நிலையை மதிப்பீடு செய்த பிறகு, பொலிஸார் வீட்டின் உள்ளே ஒரு அறையில் ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்த இரண்டு XL Bully இன நாய்களை பாதுகாப்பாக கைப்பற்றினர்.

"இவை பதிவு செய்யப்பட்ட XL புல்லி இன நாய்கள்," என்று செய்தித் தொடர்பாளர் விளக்கினார்.

"அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே அவை ஒரு அறையில் அடைக்கப்பட்டிருந்தன.” 

இறந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தற்போது பொலிஸார் ஆதரவு அளித்து வருகின்றனர்.

தாக்குதலில் சம்பந்தப்பட்ட பெண் தான்  நாய்களின் உரிமையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்