Paristamil Navigation Paristamil advert login

சார்லஸ் மன்னரின் உருவப்படம் குறித்து வாழும் நாஸ்ட்ராடாமஸ் விடுத்த எச்சரிக்கை

சார்லஸ் மன்னரின் உருவப்படம் குறித்து வாழும் நாஸ்ட்ராடாமஸ் விடுத்த எச்சரிக்கை

21 வைகாசி 2024 செவ்வாய் 09:32 | பார்வைகள் : 760


சார்லஸ் மன்னரின் உத்தியோகப்பூர்வ உருவப்படம் தொடர்பில் இருவேறு கருத்துகள் வெளியாகிவரும் நிலையில், வாழும் நாஸ்ட்ராடாமஸ் விடுத்த எச்சரிக்கை கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாழும் நாஸ்ட்ராடாமஸ் என பரவலாக அறியப்படும் Athos Salomé சார்லஸ் மன்னரின் புதிய உருவப்படம் குறித்து தமது கருத்துகளை பதிவு செய்துள்ளார். மன்னராக முடிசூடியதன் முதலாம் ஆண்டு நிறைவை பதிவு செய்யும் வகையில் உருவப்படம் ஒன்றை சார்லஸ் மன்னர் வெளியிட்டுள்ளார்.

ஆனால் அந்த உருவப்படமானது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் மன்னரின் முகத்தில் வஞ்சனை தெரிவதாக சமூக ஊடக பக்கத்தில் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். உண்மையில் மன்னரின் அந்த கபட முகம் ஒரு விபத்து அல்ல என்று Athos Salomé குறிப்பிட்டுள்ளார்.

மன்னராக அவர் பொறுப்புக்கு வந்த நாள் முதல் அவரது ஆட்சிக்குப் பின்னால், அவரது நோக்கங்கள் மற்றும் பின்னணி பற்றி ஊகங்கள் பல வெளிவந்துள்ளதை Athos Salomé சுட்டிக்காட்டியுள்ளார்.


எலிசபெத் ராணியாரின் இறப்பு, உலக கிண்ணம் கால்பந்து உட்பட பல்வேறு நிகழ்வுகளை பதிவு செய்துள்ள Athos Salomé, தற்போது சார்லஸ் மன்னரின் புதிய உருவப்படம் தொடர்பில் தாம் கவனித்த 3 விடயங்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முதலாவதாக மன்னரின் உருவப்படமானது சிவப்பு பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. அது சார்லஸ் மன்னர் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட உலகில் நிலவும் குழப்பத்தை பிரதிபலிக்கிறது.

மட்டுமின்றி பிரித்தானிய முடியாட்சியின் கீழ் புதிய ஒரு உலகம் கட்டமைக்கப்பட இருப்பதன் அறிகுறி எனவும் விளக்கமளித்துள்ளார். இரண்டாவதாக உருவப்படத்தில் காணப்படும் ஒரு பட்டாம்பூச்சி.

அது சமூகத்தின் மாற்றத்தைக் குறிப்பிடுவதாகவும், மொத்தமும் கண்காணிக்கப்படும் உலகில், தனியுரிமை என்பது வீழ்த்தப்பட்டு முழுமையான அதிகாரத்தின் பிடியில் உலகம் மாறப்போவதாக Athos Salomé குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவதாக மன்னரின் முக பாவனை மற்றும் உடல் மொழி குறித்தும் அவர் விளக்கமளித்துள்ளார். சார்லஸ் மன்னரின் முகத்தில் காணப்படும் அந்த வெறுமை, இரகசிய குழுக்கள் மற்றும் மர்மமான மரபுகளில் அவரது ஈடுபாடு குறித்து வெளிப்படுவதாகவும்,

மர்மமான அறிவு மற்றும் அசாதாரண திறன்களைக் கொண்ட ஒரு வட்டத்தைச் சேர்ந்த ஒரு ஆட்சியாளர் போல் சார்லஸ் தோற்றமளிக்கிறார் என்றும் Athos Salomé தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த உருவப்படமானது வெறும் ஓவியம் மட்டுமல்ல, பிரித்தானிய அரச குடும்பம், இராணுவ வலிமையை விட அரசியல் மற்றும் தொழில்நுட்ப உத்திகள் மூலம் இந்த முறை தங்களது கடந்த கால செல்வாக்கை மீண்டும் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதன் வெளிப்பாடு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்