கனடாவில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு சிக்கல்...

22 ஆவணி 2023 செவ்வாய் 12:02 | பார்வைகள் : 9200
கனடாவில் வீடுகள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
இந்த அதிகரிப்பானது சர்வதேச மாணவர்கள் ஒரு முக்கிய காரணம் என்னும் கருத்து கனடாவில் அதிகரித்துவருகிறது.
கனடாவில் சுமார் 800,000 சர்வதேச மாணவர்கள் வாழ்ந்துவருகிறார்கள்.
ஆக, அவர்களால் வீடு தட்டுப்பாடு நிலவுவதாக ஒரு கருத்து நிலவுகிறது.
ஆகவே, சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த திட்டமிட்டுவருகிறது கனடா அரசு.
அதாவது, மாணவர்களுக்கு நல்ல கல்வியைக் கொடுக்கும் நோக்கம் இல்லாமல், தங்கள் லாபத்துக்காக ஏராளமான மாணவர்களை கனடாவுக்கு ஈர்க்கும் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க முன்னாள் புலம்பெயர்தல் அமைச்சரும், இந்நாள் உள்கட்டமைப்புத்துறை அமைச்சருமான Sean Fraser திட்டமிட்டுவருகிறார்.
சமீபத்திய தேர்தலில், ஆளும் ட்ரூடோவின் கட்சி பின்தங்கியதற்கு வீடுகள் பற்றாக்குறை பிரச்சினை ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
ஆகவே, அதை சமாளிக்க அரசு திட்டமிட்டுவரும் நிலையில், கடந்த மாதம் வரை புலம்பெயர்தல் அமைச்சராக இருந்த Sean Fraser தற்போது உள்கட்டமைப்புத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, வீடுகள் பற்றாக்குறையை எதிர்கொள்ள திட்டமிட்டுவருகிறார் அவர்.
அதற்கு அவர் எடுத்துள்ள ஆயுதம், சர்வதேச மாணவர்களைக் கட்டுப்படுத்துவது.
ஆக, வரும் நாட்களில் சர்வதேச மாணவர்கள் கனடா வருவதற்கு சிக்கல்கள் அல்லது குறைந்தபட்சம் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நிலை உருவாகலாம் என எதிர்பார்க்கபடுகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025