Paristamil Navigation Paristamil advert login

அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது இந்த பிரபல இயக்குனரா?

அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது இந்த பிரபல இயக்குனரா?

21 வைகாசி 2024 செவ்வாய் 13:44 | பார்வைகள் : 694


அஜித் தற்போது ’விடாமுயற்சி’ மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படத்தை சிறுத்தை சிவா இயக்குவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது இன்னொரு இயக்குனரும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெறாமல் இருக்கும் நிலையில் அவர் திடீரென ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் ’குட் பேட் அக்லி’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ’விடாமுயற்சி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜூன் இறுதியில் நடைபெறும் என்றும் இந்த ஆண்டுக்குள் இந்த படத்தை வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ’குட் பேட் அக்லி’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று கூறப்படுவதால் அடுத்தடுத்த சில மாத இடைவெளியில் ’விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அஜித் நடிக்க இருக்கும் 64வது திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்குவார் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது அஜித்தை சந்தித்து இயக்குனர் மோகன் ராஜா ஒரு கதை கூறியுள்ளதாகவும் அந்த கதை அஜித்துக்கு பிடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் பட்டியில் மோகன் ராஜா இணைந்துள்ளதாகவும் அவர் ’அஜித் 64’ படத்தை இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்