இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் மீண்டும் மாற்றம்!
21 வைகாசி 2024 செவ்வாய் 17:06 | பார்வைகள் : 2101
நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று(21) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபாய் 78 சதமாகப் பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபாய் 92 சதமாகக் காணப்பட்டது.
அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 304 ரூபாய் 31 சதமாகப் பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 304 ரூபாய் 59 சதமாகக் காணப்பட்டது.