■ Nouvelle-Calédonie பயணமாகும் ஜனாதிபதி மக்ரோன்..!

21 வைகாசி 2024 செவ்வாய் 17:51 | பார்வைகள் : 8111
பிரான்சின் கடல்கடந்த நிர்வாகப்பிரிவான Nouvelle-Calédonie தீவுக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று மாலை பயணிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று மே 21, செவ்வாய்க்கிழமை மாலை அமைச்சரவைக் கூட்டம் (Conseil des ministres) இடம்பெற்றது. அதனை முடித்துக்கொண்டு ஊடகங்களிடம் உரையாற்றிய அரச பேச்சாளர் Prisca Thevenot, மேற்படி தகவலை தெரிவித்தார்.
Nouvelle-Calédonie தீவின் தலைநகர் Nouméa இற்கு தனது அரச விமானத்தில் ஜனாதிபதி பயணிக்க உள்ளார்.
குறித்த தீவில் கடந்த இரு வாரங்களாக பலத்த வன்முறைச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. இரு ஜொந்தாம் வீரர்கள் உள்ளிட்ட ஆறு பேர் இந்த கலவரங்களில் கொல்லப்பட்டுள்ளனர். நிலவரத்தை நேரில் ஆராய ஜனாதிபதி அங்கு பயணிக்கின்றார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025