Bondy : எட்டு வயது சிறுமி பலி.. தந்தை கைது..!!

21 வைகாசி 2024 செவ்வாய் 18:02 | பார்வைகள் : 7981
Bondy (Seine-Saint-Denis) நகரில் வசிக்கும் எட்டு வயது சிறுமி ஒருவர் பலியானதை அடுத்து, அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
மே 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நண்பகலின் பின்னர் அவசர மருத்துவக்குழுவினர் அழைக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். வன்முறைக்கு உள்ளான குறித்த சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதையடுத்து, அச்சிறுமியின் தந்தை இன்று மே 21, செவ்வாய்க்கிழமை காலை கைது செய்யப்பட்டார்.
அவரே மகளை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தாக்குதல் தொடர்பான மேலதிக விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை.