Paristamil Navigation Paristamil advert login

பத்திரனாவை 120,000 டொலருக்கு ஏலத்தில் எடுத்த கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ்

பத்திரனாவை 120,000 டொலருக்கு ஏலத்தில் எடுத்த கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ்

22 வைகாசி 2024 புதன் 08:13 | பார்வைகள் : 5152


லங்கா பிரீமியர் லீக் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனா 120,000 டொலருக்கு ஏலத்திற்கு எடுக்கப்பட்டார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய மதீஷா பத்திரனா (Matheeshaa Pathirana) 13 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார்.

லங்கா பிரீமியர் லீக் டி20 தொடர் சூலை மாதம் தொடங்குகிறது. 

இதற்கான ஏலம் தொடங்கி நடந்து வருகிறது. இதில் மதீஷா பத்திரனா அதிகபட்ச தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் (Colombo Strikers) அணி 120,000 டொலருக்கு ( இலங்கை மதிப்பில் 3,60,02,100) அவரை வாங்கியுள்ளது.  

டி20 உலகக்கோப்பைக்கான  இலங்கை அணியில் பத்திரனா இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்