ஒருமுறை மட்டுமே ஆதார் அட்டையில் இதனை மாற்ற முடியும் தெரியுமா...?
22 வைகாசி 2024 புதன் 08:15 | பார்வைகள் : 1703
ஆதார் அட்டையில் ஒரு சில விடயங்களை மாற்றுவதற்கு வரம்பு உள்ளது என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
அத்தியாவசிய ஆவணமாக ஆதார் மாறியுள்ள நிலையில், வங்கி முதல் கடவுச்சீட்டு பெறுவது வரை என அனைத்திற்கும் கேட்கப்படுகிறது.
எனவே, ஆதார் அட்டையில் உள்ள தகவல்கள் சரியானதாக இருக்க வேண்டியது அவசியம். இதன் காரணமாக சில தரவுகளை நாம் புதுப்பிக்க வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால் அவற்றில் ஒரு சில விடயங்களுக்கு வரம்பு உண்டு.
உங்கள் பாலினம், பிறந்த திகதி ஆகியவற்றை ஆதாரில் ஒருமுறை மட்டுமே மாற்ற முடியும்.
உங்கள் பெயரை இரண்டு முறை மாற்றலாம்.
3வது முறையாக மாற்ற வேண்டும் என்றால், ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டும்.
UIDAIயின் பிராந்திய அலுவலகத்திற்கு சென்று உங்களின் பெயரைப் புதுப்பிக்க அனுமதி பெற வேண்டும்.
உங்களின் குடியிருப்பு முகவரியை மாற்ற வேண்டும் என்றால் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, குடும்ப அட்டை அல்லது பிற சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த தகவல்கள் அனைத்தும் ஒன்லைனில் புதுப்பிக்கப்படும்.
(குறிப்பு: இன்றைய சூழலில் பல்வேறு வகையான மோசடிகளில் ஆதார் அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, ஆதார் அட்டையில் உள்ள தகவல்கள், தொலைபேசியில் நீங்கள் பெற்ற ஆதார் OTPஐ தெரியாத நபர்களிடம் பகிர வேண்டாம்)