Paristamil Navigation Paristamil advert login

ரூ.25 லட்சத்திற்கு ஏலம் போன Fancy Number Plate..! எங்கு நடந்தது தெரியுமா?

ரூ.25 லட்சத்திற்கு ஏலம் போன Fancy Number Plate..! எங்கு நடந்தது தெரியுமா?

22 வைகாசி 2024 புதன் 08:20 | பார்வைகள் : 859


பல லட்சங்கள் கொடுத்து சொகுசு கார்கள் வாங்கும் நிலையில், Fancy Number Plate வாங்குவதற்கு ஒருவர் ரூ.25 லட்சம் செலவு செய்துள்ளார்.

பெரும்பாலும் 'விஐபி' எண்கள் என குறிப்பிடப்படும், ஆடம்பரமான பதிவு எண்கள் அவற்றின் இலக்கங்கள் மற்றும் எழுத்துக்களின் வரிசைகளுக்காக தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

இந்த எண்கள் பெரும்பாலும் தனிப்பட்ட விருப்பத்தேர்வுகள், அதிர்ஷ்ட எண்கள் அல்லது உணர்ச்சி மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

இந்திய மாநிலமான தெலங்கானாவில் ஒருவர் ரூ.25 லட்சம் செலவு செய்து டிஜி -09-9999 என்ற Fancy Number -யை வாங்கியுள்ளார்.

தெலங்கானா சாலை போக்குவரத்து ஆணையமானது பேன்ஸி பதிவு என்கள் பெறுவதற்கான இணையவழி ஏலத்தை நடத்தியது. அப்போது, டிஜி -09-9999 என்ற Fancy Number -க்கு கடுமையான போட்டி நிலவியது.

அதாவது இந்த எண்ணை வாங்குவதற்கு 11 பேர் போட்டியிட்டனர். இறுதியாக இந்த எண், ரூ.25 லட்சத்து 50 ஆயிரத்து 2 ரூபாய்க்கு ஏலம் போனது.

இதனை கோடீஸ்வரர் ஒருவர் தனது விலையுயர்ந்த காருக்காக இவ்வளவு தொகை கொடுத்து வாங்கியுள்ளார். இந்த வாகன பதிவு எண்ணை வாங்கியவரின் விவரம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

தெலங்கானா மாநிலத்தில் இதுவரை அதிக விலை கொடுத்து வாங்கிய பதிவு எண் இதுதான் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் '9999' என்ற எண், ரூ.21.6 லட்சத்திற்கு ஏலம் போனது.   

வர்த்தக‌ விளம்பரங்கள்