Nouvelle-Calédonie : இணையத் தொடர்பை துண்டிக்கும் முயற்சியில் அரசு..!
22 வைகாசி 2024 புதன் 13:27 | பார்வைகள் : 19798
Nouvelle-Calédonie தீவில் TikTok செயலியை தடை செய்துள்ள நிலையில், தற்போது இணைய சேவையினை தடை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூகவலைத்தளங்களூடாகவும், இணையத்தளங்களூடாகவும் தகவல் பரப்பப்பட்டு வன்முறைச் சம்பவங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, 5G, 4G மற்றும் 3G ஆகிய இணைய சேவைகளை முடக்கும் திட்டம் ஒன்றை அரசு ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் GSM சேவைகள் (தொலைபேசி அழைப்புக்களும், குறுந்தகவல்களும், 2G இணைய சேவையும்) செயற்படும் எனவும், இது தொடர்பான இறுதிக்கட்ட அறிவிப்புகள் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan