எத்தனை வருஷமானாலும் பழமோ, இலையோ யாராலும் பறிக்கப்படாத ஒரு மரம்
22 வைகாசி 2024 புதன் 16:30 | பார்வைகள் : 1420
இப்படித்தாங்க ஒரு சின்ன பையன் வந்து கேட்டான்..
எத்தனை வருஷமானாலும் பழமோ, இலையோ யாராலும் பறிக்கப்படாத ஒரு மரம் இருக்கு.. அது என்னன்னு.
அது எப்படி ஒரு மரத்தில் பழத்தையோ, இலையையோ யாரும் பறிக்காமல் இருப்பார்கள்.
அதுவும் எத்தனை வருஷமானாலும் எப்படி பறிக்காமல் இருப்பார்கள்னு தோணிச்சி.
மூளையை கசக்கி பார்த்தும் ஒன்னுமே பிடிபடல.
சரி அந்த பையன்கிட்டயே கேட்டுறலாம்னு வெட்கத்தை விட்டு கேட்டோம்.
அதுக்கு அந்த பையன் சொன்ன பதிலை கேட்டதும்தான்.. ஆஹா இந்த ஆங்கிளில் யோசிக்காம விட்டுட்டோமேன்னு தோணிச்சி.
என்ன மரமாம் தெரியுமா..? கொய்யா மரமாம்! அதாங்க.. பேருலயே கொய்யா அதாவது பறிக்காத என்று பொருள் வருதுல்ல, அதுதான் நம்மை வச்சி அந்த பையன் கலாய்ச்சிருக்கான்.
ஆனா ஒன்னுங்க.. தமிழோட பெருமையே இதுதான். ஒரே சொல் பல பொருள் தரும். நாமதான் அதை புரிஞ்சிக்க கொஞ்சம் யோசிக்க தேவையிருக்கு. சரிதானே பாஸ்.