Paristamil Navigation Paristamil advert login

யாழில் பிறந்து 8 நாட்களேயான சிசு மரணம்

யாழில் பிறந்து 8 நாட்களேயான சிசு மரணம்

23 ஆவணி 2023 புதன் 02:56 | பார்வைகள் : 7405


யாழ்ப்பாணத்தில் ஐந்து நாட்கள் தொடர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த, பிறந்து எட்டு நாட்களேயான சிசு ஒன்று  உயிரிழந்துள்ளது.

குறித்த சிசு பிறந்து மூன்று நாட்களில் காய்ச்சலால் பிடிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த 19ஆம் திகதி காலை நயினாதீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து அன்றையதினம்  பிற்பகல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளது.

இவ்வாறு சிகிச்சை பெற்று வந்த சிசு சிகிச்சை பலனின்றி நேற்று காலை (22) உயிரிழந்தது. நயினாதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த மதிவதனன் சுதர்சாவிந் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

சிசுவின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரணம் விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்