கமல் ரஜினி மீண்டும் இணைவார்களா?

23 ஆவணி 2023 புதன் 05:33 | பார்வைகள் : 8525
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் கடந்த 70களில் பல திரைப்படங்களில் இணைந்து நடித்தனர். ஆனால் 1979 ஆம் ஆண்டு வெளியான ’நினைத்தாலே இனிக்கும்’ திரைப்படம் தான் இருவரும் இணைந்து நடித்த கடைசி திரைப்படம். இதன் பிறகு 40 ஆண்டுகளாக இருவரும் இணைந்து ஒரே திரைப்படத்தில் நடிக்கவில்லை.
இந்த நிலையில் ரஜினி, கமல் விரைவில் இணைந்து நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் ’ரட்சகன்’ ’ஜோடி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் பிரவீன்காந்த் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’40 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி, கமல் இணைந்து நடிக்க உள்ளனர் என்று கூறினார். மேலும் இந்த படத்தில் அஜித் மற்றும் ஷாருக்கான் கேமியோ வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தை இயக்குபவர் ஒரு லக்கி டைரக்டர் என்றும் இந்த படம் தான் இந்தியாவின் மிகப்பெரிய படமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இயக்குனர் பிரவீன்காந்த் கூறியபடி இப்படி ஒரு அதிசயம் நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1