’அஞ்சாமை’ நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி கதையா?
23 வைகாசி 2024 வியாழன் 13:25 | பார்வைகள் : 1551
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் மூலம் நீட் தேர்வால் உயிரிழந்த மாணவியின் கதையாக இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விதார்த் மற்றும் வாணி போஜன் முக்கிய வேடங்களில் நடித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்திற்கு ’அஞ்சாமை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
விதார்த், வாணி போஜன், ரகுமான் உள்பட பலர் நடித்த இந்த படத்தை சுப்புராமன் இயக்கியுள்ளார். ராகவ் பிரசாத் இசையில், கலா சரண் பின்னணி இசையில், கார்த்திக் ஒளிப்பதிவில் ராம் சுந்தர் படத்தொகுப்பில் உருவாக்கி உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் போஸ்டரில் விதார்த் மற்றும் வாணி போஜன் தங்களது இரண்டு குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்கும் காட்சி இருந்தாலும் அதன் பின்னணியில் ’உயிர் பலி வாங்கிய நீட்’ ’ஏழை மாணவர்களுக்கு டாக்டர் கனவு’ உள்ளிட்ட செய்திகள் இருப்பதை பார்க்கும்போது இந்த படம் நீட் தேர்வால் உயிரிழந்த மாணவியின் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ’அஞ்சாமை’ திரைப்படம் வரும் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து விரைவில் சரியான ரிலீஸ் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.