Paristamil Navigation Paristamil advert login

மின்னல் தாக்கி ஒருவர் பலி.. ஒருவர் கவலைக்கிடம்..!

மின்னல் தாக்கி ஒருவர் பலி.. ஒருவர் கவலைக்கிடம்..!

24 வைகாசி 2024 வெள்ளி 07:00 | பார்வைகள் : 2404


பா-து-கலே மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மே 23, நேற்று வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு இச்சம்பவம் Courrières எனும் நகர்ப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள Gabriel-Péri எனும் விளையாட்டு அரங்கில் உதைபந்தாட்ட பயிற்சி இடம்பெற்றுக்கொண்டிருந்தது. அதன் போது அரங்கின் மீது மின்னல் தாக்குதல் பதிவானது.

இந்த தாக்குதலில் அரங்கில் இருந்த இளம் நபர்கள் இருவர் மீது மின்னல் தாக்கியது. ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டபோதும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

படுகாயமடைந்த இரண்டாவது நபர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பா-து-கலே மாவட்டத்துக்கு நேற்றைய தினம் இடி மின்னல் தாக்குதலுக்காக ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்