திமோரில் 44,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்கள் - அதிர்ச்சி தரும் கண்டுபிடிப்பு!
24 வைகாசி 2024 வெள்ளி 09:57 | பார்வைகள் : 1904
கிழக்கு திமோரில் கிடைத்துள்ள தொல்பொருள் கண்டுபிடிப்புகளின் மூலம் மனிதர்கள் வாழ்ந்த பழமையான காலம் கண்டறியப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு திமோரில்(Timor) உள்ள ஆழமான குகையிலிருந்து தொல்லியல் ஆய்வாளர்கள் மதிப்புமிக்க வரலாற்றுச் சான்றுகளை கண்டறிந்துள்ளனர்.
கற்கருவிகள் மற்றும் விலங்கு எலும்புகள் மற்றும் மனித நடவடிக்கையின் எச்சங்கள், சுமார் 44,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித குடியிருப்பை காட்டுகின்றன.
இந்த கண்டுபிடிப்பு நம் முன்னோர்களின் இடம்பெயர்வு முறைகள் குறித்த புதிய புரிதலை தருகிறது.
அதாவது எகிப்திய பிரமிடுகள் கட்டப்படுவதற்கு 35,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய ராஜ்ஜிய பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆய்வாளர்கள் குழு, லெய்லி பாறை(Laili rock) அமைப்பில் உள்ள ஆழமான மண் படிவுகளை துல்லியமாக பகுப்பாய்வு செய்தனர்.
குறிப்பாக, 59,000 முதல் 54,000 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த படிவுகளில் முன்னர் மனிதர்கள் வாழ்ந்ததற்கான எந்த அறிகுறிகளும் இல்லை.
ஆனால், இது சுமார் 44,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் திடீரென மனிதர்கள் குடியேறினர் என்பதைக் குறிக்கும் "வருகை கையொப்பத்தை"(arrival signature) எடுத்துக் காட்டியுள்ளது.
அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் சிறந்த தொல்லியல் பேராசிரியர் Sue O’Connor புதிதாக ஆய்வு செய்யப்பட்ட இந்த பகுதி திமோர் தீவில் மனிதர்கள் முதன் முதலில் வந்த நேரம் பற்றிய நமது புரிதலை பின்னுக்குத் தள்ளுகிறது," என்று தெரிவித்துள்ளார்.